தங்கள் தாய் மண்ணில் அகதிகளாகத் தவிர்க்கும் தமிழ் மக்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
போர்ச் சூழ்நிலையில் வாழும் தமிழ் மக்களின் நிலை பற்றி வெளிநாடுகளில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பலதரப்பட்டஇ உண்மையற்றதும்இ அவதூறுத்தனமுமான பல பிரச்சாரங்களைச் செய்து வருகிறார்கள். இதனாற் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்கள் தாய் நாட்டில் தங்கள் உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமற் தவிக்கிறார்கள். வெளிநாடுகளில் கட்டவிழ்த்து விடப்படும் பொய்ப்பிசாரங்களின் உண்மையைக் கண்டறிய இலங்கைக்குச் சென்றவர்களின் நீண்ட அறிக்கையை எழுதமுதல் அகதிகளின் நிலை பற்றி எழுதுவது முக்கியம் என்று கருதியதால் இக்கட்டுரை எழுதப் படுகிறது.
கொழும்பில்இ புலம் பெயர்ந்து வந்த உண்மையறி்குழுஇ மூன்று நாட்களாகப் பல அமைச்சர்கள்இ அதிகாரிகளுடன் நடத்திய பல கலந்துரையாடல்கள் தொடர்ந்து எழுதப் படும்.
புலம் பெயர்ந்த நாடுகளிற் தொடரும் பொய்ப்பிரசாரங்களையெல்லாம் உற்று நோக்கிவிட்டுஇ இலங்கையில் போர்ச்சூழலில் அகப்பட்டு தவிக்கும் அப்பாவி தமிழர்களுக்கு என்ன நடக்கிறதுஇ அத்துடன் இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையில் அகப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களை எப்படி வெளியேற்றுவது என்று பார்ப்பதற்குமஇ அவர்களுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசியத் தேவைகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுத்திருக்கிறதா என்று அறியவும் ஒன்பது நாடுகளிலிருந்து இருபதுக்கும் மேலான பல தமிழ் சமூகநலவாதிகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தநதிருந்தார்கள்.
அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் கோரிக்கையுடன் ஆரம்பித்த இந்த ‘உண்மையறியும் புலம் பெயர் தமிழர் குழு” கடந்த மாதம் 27, 28, 29 ஆம் திகதிகளில் அரச தரப்பிலுள்ள பல தரப்பட்ட மந்திரிகள்இ அதிகாரிகள் என்போரைச் சந்தித்து அகதிகளின் நிலை பற்றிய விளக்கங்களைக் கேட்டறிந்து கொண்டார்கள்.
இலங்கை அமைச்சர்கள் மட்டுமன்றி வெளிநாட்டுத் தூதவர்களையும் சந்தித்து. அகதிகள் பற்றிக் கலந்துரையாடவும் சந்தர்ப்பமம் கிடைத்தது. இவைபற்றிய தகவல்கள் கூடியவிரைவில் எழுதப்படும்.
பழைய போராளிகளுக்கான புனருத்தாருண நிலையம்
கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் முடிவுபெற்றபின் போரிலிருந்து தப்பியோடிவந்து புனர்வாழ்வு நிலையங்களில் வாழும் இளம் போராளிகளை பார்வையிடச் சந்தர்ப்பம் கிடைத்தது. 30.03.09ல் அவர்களைச் சந்தித்தோம். அவர்களின் பழைய வாழ்க்கை பற்றி எந்த விதமான பேச்சும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. சுற்றிவர மலைகளாற் சூழப்பட்ட அமைதியான இடத்தில் இந்த புனத்தாருண நிலையம் அமைந்திருக்கிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினர்இ நாங்கள் அவர்களிடம் கேட்காமலே தாங்கள் புலிகளால் பல வந்தமாகக் கடத்தப்பட்டு போர்களத்துக்குக் கொண்டு போகப்பட்டவர்கள் என்றும்இ பலிகள் தோற்றுக் கொண்டு பின்வாங்கும் போது தப்பியோடிவந்து இராணுவத்திடம் அடைக்கலமானதாகவும்; சொன்னார்கள்;.இவர்களைப் பார்த்தால் மிகவும் ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்று அப்பட்டமாகத் தெரியவந்தது.
தாங்கள் உயிருடன் தப்பி வந்து இங்கிருப்பது தங்கள் பெற்றோருக்குத் தெரியாது என்ற சொன்னார்கள். இவர்களைப் பாதுகாக்கும் பொறுப்புஇ புலிகளுடன் நடந்த போரில் தனது கையையிழந்த பழைய இராணுவ அதிகாரியிடம் கொடுக்கப் பட்டிருக்கிது. அத்துடன இவர்களுக்கான சேவைகள்இ தேவைகள் என்பன பன்னாட்டு அமைப்புக்களின் கண்காணிப்பில் நடத்தப் படுகிறது.
தமிழர்கள் யாரும் அங்கு பணியாற்றவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டதும்இ அந்த விடயம் தங்களுக்குத் தெரியும் என்றும் தங்களிடம் பாதுகாப்புக்கு வந்திருக்கும் இளம் தலைமறையினரின் பாதுகாப்புக்காகத் தமிழரைப் பணியில் அமர்த்தப் படுவது தற்போது தவிர்க்கப் பட்டிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. இவர்களின் புனர்த்தாருண வாழ்க்கை சம்பந்தமாகப் புலம் பெயர்ந்த குழுவால் சில பரிந்துரைகள் சொல்லப்பட்டன.
புனர்வாழ்வு நிலையத்தில் வாழும் பழைய போராளிகளுக்காகக் கொடுத்த பரிந்துரைகள்:
மேற்குறிப்பிட்ட அகதி முகாமுக்கும் அடுத்த முகாம்களுக்கும் விஜயம் செய்த அடுத்த நாள். திரு பசில் இராஜபக்ஸா அவர்களுக்குஇ புலம் பெயர்ந்த உண்மையறி குழு சார்பாகஇ இந்த முகாம் பற்றிய அபிப்பிராயத்தை எழுதி அனுப்பினோம் ( டாக்டர் நரேந்திரன். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்). எங்கள் பரிந்துரை கீழ் குறிபபிடப்பட்டிருகிறது.
- இந்த இளம் தலை முறையினருடன் கலந்து பழக அவர்களின் வயதை ஒத்தவர்களின் ஒன்று கூடல் மிகவும் அவசியம்
- இவர்களுக்கு அவர்களின் சமயஇ கலாச்சார விடயங்களில் ஈடுபாட்டை உண்டாக்கும் பல விடயங்கள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டும்.
- அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உடுப்புக்களின் தரம் உயர்த்தப்படவேண்டும்.
- இவர்களின் புனர்வாழ்வுக்கு உதவப் புலம் பெயர் தமிழர்களின் உதவியை நாடவேண்டும்.
வவனியா அகதி முகாம்கள்:
வவுனியாவிலுள்ள அகதிகளின் உண்மை நிலையை மாசிமாதம் 31 ஆம் திகதி வவுனியாவிற்கு நேரடிப் பிரயாணத்தையும் மேற்கொணடோம்;. அங்கு வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பியன்சியா.சார்ல்ஸின் மேற்பார்வையில் அகதிகளின் பரிபாலனம் பற்றிய நிர்வாகக் கட்டமைப்பு நடக்கின்றன. அகதிகளைப் பார்ப்பதற்கு முன்னதாக வெளியிலிருந்து வந்த புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் குழு வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் உடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்கள்.
இன்று அங்கு நடக்கும் போர்ச்சூழலால் தமிழ் அகதிகள் வவுனிய யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள பதின்மூன்று அகதிமுகாங்களில் தங்கவைக்கபபட்டிருக்கின்றனர். வவுனியாவில் தங்கவைக்கப்படடிருக்கும் அகதிகளின் நிலைகள் பற்றிய விளக்கங்களை திருமதி பியான்சியா சார்ல்ஸ் அவர்கள் தந்தார்கள்.இங்க காமினி வித்தியாலயம் என்ற இடத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து தப்பி வரும் தமிழ் மக்களுக்கான ‘உடனடி அகதி முகாம’; அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவிதமான வசதிக்குறைவுகளுடன் பரிதாபமான வாழ்க்கை வாழ்கிறார்கள். புலமபெயர் குழு சென்றிருந்த அன்று 5.000 தமிழ் மக்கள் வந்திருந்தார்கள். உடனடியாக வந்தவர்களைப் பார்க்கவும் அவர்களின் துயரை அறியவும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களின் தோற்றம் கண்ணீரை வரவழைத்தது. பல நாட்கள் சரியாக உணவு கிடைக்காத பட்டினித்தோற்றங்கள்இ பல நாட்கள் எண்ணெய் காணாத பரட்டைத்தலைமயிர்களஇ பயந்த பாவம்இ சரியான உடைகளற்றவர்கள்இ ஊனமான பலர்இ பாலுக்கு அழும் குழந்தைகள் என்று விபரிக்க முடியாத எத்தனையோ காட்சிகாளால் மனம் வெதும்பும் இடமது.
அரசாங்கமும் பல தரப்பட்ட உலக ஸ்தாபனங்களும் அகதிகளுக்கு உணவுஇ உடைஇ மருத்தவ வசதிகளைச் செய்தாலும் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டுபோகும் அகதிகளின் தொகையால் அத்தியாவசியமான பொருட்களின் தட்டுப்பாடு இருக்கிறது. இங்கு பல தரப்பட்ட மருத்துவ தேவைகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். 200மக்கள் கைஇ கால்களறறு ஊனமாக இருக்கிறார்கள். இந்த ஊனமான மக்களுக்கு நாற்சக்கர வண்டிகள் தேவை. நிறையக் குழந்தைகள் இருப்பதால் பால் மா தட்டுப்பாடுண்டு இங்கு எங்களுடன் சேர்;ந்து யுனிசெவ் உட்படப்பல அகில உலக ஸ்தாபனங்கள் பணியாற்றகின்றன. ஆனாலும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் தொகையான மக்களுக்குத்தேவையானவற்றை வாங்கப் புலம் பெயர் மக்கள் உதவி செய்தால் பெரும் உதவியாகவிருக்கும்’ என்று கூறினார் அரசாங்க அதிபர் திருமதி பியான்சா சார்ல்ஸ்.
அத்துடன்இ மிக மிக முக்கியமான உதவியாக வெளிநாடுகளில் வாழும் தமிழ் வைத்தியர்கள்இ மன நல வைத்தியர்கள்இ தாதிமார்இ மனவள நிபுணர்கள் என்போர் அகதி முகாமுக்கு வந்து உதவி செய்தால் மிக மிக உதவியென்றார் புலம் பெயர்ந்த தமிழ் வைத்தியர்கள் இந்த முகாமுக்குச் சென்ற உதவி செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை இககட்டுரையின் முடிவில் பார்க்கவும்.
சுனாமி கால கட்டத்தில் அவதிப்பட்ட மக்களுக்கு உதவுவதாகச் சொல்லிவிட்டுப் பழைய துணிகளையனுப்பியது மாதிரியான உதவிகள் வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார் அரசாங்க அதிபர். இந்த அகதி முகாமுக்குச் செல்வதற்கு அனுமதி தந்த பாதுகாப்பு அதிகாரிகள் அகதிகளிடம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்றும் ஒலி ஒளி விடியோ பதிவுகள் எதுவும் செய்யக் கூடாது என்றும் சொல்லியிருந்ததால் அவர்களை நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. ஆனாலும் அவர்கள் தாங்கள் எப்படித் தப்பி வந்தார்கள் என்று நாங்கள் கேட்காமலே சொன்னார்கள்.
அவர்கள் எங்களைக் கண்டதும் பல துன்பங்களையும் சொல்லிக் கதறினார்கள். தங்களை விடுதலைப் புலிகள் தப்பியோடாற் தடுத்து வைத்துக் கொடுமை செயததாகவும் அதையும் மீறித் தப்பி வந்தவர்களைக் கண்டபடி தாக்கியதாகவும் சொல்லியழுதார்கள். இவர்கள் காட்டிய காயங்கள் அவர்களின் உடம்பின் பின் பக்கங்களிலேயெ இருந்ததால் அவர்களின் கூற்றில் இருப்பது உண்மை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. (பாதுகாப்புப்படையினிரின் கண்களில் மண்ணைத் தாவிவிட்டுச் சில படங்களை எடுத்தேன்இ பார்க்கவும்).
தப்பி வந்த ஒரு இளம் சிறுவன் தங்களின் துயரை ஒரு சிறு கடிதத்தில் எழுதித்தந்தான். அந்த இளம் பையனுக்கு அருகில் இருந்த இளம் வயது(12 இருக்கலாம்). தனது தாயைப் புலிகள் பிடித்து வைத்து விட்டுத் தன்னையனுப்பியதாச் சொல்லியழுதான்.
தப்பியோடுபவர்களில் பலரின் உறவினர்களைப் புலிகள் பயணக் கைதிகளாகப் படித்து வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.இந்த அகதி முகாமில் பலர் தாய் தகப்பனற்ற குழந்தைகளாத் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். கணவனற்ற மனைவியர் பலர். பதினான்கு வயதுக்கு மேற்பட்ட அத்தனை சிறாருக்கும்இ நாற்பது வயதுக்குட்பட்டவர்கள்இ ஆண் பெண் வித்தியாசமின்றிப் பலருக்கும் புலிகள் ஆயுதம் கொடுத்து போருக்குள் இழுப்பதாகவும் சொன்னார்கள். புலிகளின் மாவீரர் குடும்பங்களை வெளியேறும் மக்களுடனும் நோயாளிகளாகப் புலிகள் அனுப்புவதாகவும் சொன்னார்கள். வெளியில் தப்பி வரும்; மக்களுடனும் தங்கள் ஆட்களைப் புலிகள் அனுப்பிக் கொண்டிருப்பதாகவும்; சொன்னார்கள். தப்பியோடி வந்த பலரிடம் புலிகள் தலா பத்தாயரம் ருபாய் கேட்டதாகச் சொன்னார்கள்.
அகதிகளின் தொகை நேரத்துக்க நேரம் மிகவும் அதிகமாவதைக் காணமுடிந்தது.அத்தியாவசிய வேவைகள் கொடுக்கப்பட்டாலும் இவர்களுக்கு இன்னும் எவ்வளவோ தேவைகள் உள்ளன. இந்த அகதி முகாமில் தற்காலிகப் பாடசாலையுமுண்டு. புத்தகங்களுக்குத் தட்டுப்பாடுள்ளது. பாடசாலைப் புத்தகங்களையனுப்பினால் நன்றியாயிருப்பார்கள்.
இந்த அகதி முகாமுக்கு விடயம் செய்த அடுத்த நாள். திரு பசில் இராஜபக்ஷா அவர்களுக்குஇ புலம் பெயர்ந்த உண்மையறி குழு சார்பாகஇ இந்த முகாம் பற்றிய அபிப்பிராயத்தை எழதி அனுப்பினோம் ( டாக்டர் நரேந்திரன். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்). எங்கள் பரிந்துரை கீழ் குறிப்பிடப்பட்டிருக்கிறது
காமினி வித்தியாலய அகதி முகாம் பற்றிய பரிந்துரை:
1. இந்த முகாம் மிகவும் குறுகிய இடத்தில் அதிகப்படியான அகதிகளால் மிகவும் நெரிசலாகவிருக்கிறது. அதனால்இ
- இன்னுமொரு அகதி முகாம் உடனடியாக நிறுவுதல் அவசியம்.
- இந்த எற்பாடு உடனடியாக அமுல் நடத்தப்பட்டுஇ குடும்பங்களுக்கு அளவான இடங்கள் ஒதுக்கப்படவேண்டும்
- இட நெருககடியால் வரும் தொற்று நோய்கள் தவிர்க்கப்படவேண்டும்
- இப்போது சுவர்களுக்காகப் பாவிக்கப்பட்டிருக்கம் தகரத் துண்டுகள் இனிவரவிருக்கும் அதி வெப்ப காலத்தில் பார தூரமான சுகாதாரப்பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதால் இந்த விடயத்தில் கவனம் எடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கவும்.
- அகதிகள் வெளியில் வாழும் தங்கள் குடும்பங்ளுடன் தொடர்பு கொள்ளும் வசதிகள் உடனடியாகச் செய்படவேண்டும்இ இது பல விதமான மனத் துயரையம் சொந்தக்காரர்கள் எஙNகெயிருக்கிறார்கள் என்ற தவிப்பையம் தவிர்க்கும
(அடுத்த நாளே வெளியிலிருந்து உறவினர் போன் செய்வதற்கான டெலிபோன் வசதி செய்த கொடுக்கப்பட்டிருக்கிறது)
2.. இவ்விடத்தில் புலிகளின் போராளிகள் பொது மக்களுடன் வந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல தடயங்கள்; இருப்பதால்இ அவர்களைக் கவனமாகவம் உடனடியாகவும் அடையாளம் காணப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டு அகதி முகாமில் குழப்பங்கள் வராமற் தடுக்க வேண்டும்.
3. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக அகதி முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்படவேண்டும். அவர்களுக்குப் குடும்பங்கள் இல்லாவிட்டால் அவர்களை வயோதிபர் மடங்களுக்கு அனுப்ப வேண்டும்
கதிர்காமர் அகதி முகாம்-வவுனியா
இங்கு கிட்டத்தட்ட 6000-7000 மக்கள் வாழ்கிறார்கள். தற்காலிக அகதி முகாமாகவிருந்தாலும் பெரும்பாலான அடிப்படை வசதிகளை இந்த முகாமிற் காணலாம். பெரும்பாலானவர்கள்இ தங்களுக்குத் தொழில் வசதி செய்து தரும்படி கேட்டார்கள். இவர்களுக்கு ஐ.ரி. தச்சுவேலைஇ எலக்டிசிற்றி வேலை போன்று பல படிப்புக்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. கோயில் ஒன்றுமுள்ளது. ஓலைக் கூரையுடன் பாடசாலையுமுண்டு. பாடப் புத்தகங்களுகுச் சரியான தட்டுப்பாடு. இந்த அகதி முகாம் மற்ற அகதி முகாம் மாதிரியே மிகவும் பாதுகாப்புடன் நடத்தப் படுகிறது.
போர்ச்சூழ்நிலையிலிருந்து தப்பி வந்த மக்களை இன்னுமொருதரம் புலிகள் வந்து கடத்திக்கொண்டுபோய்ப் போர்க் களத்தில் தள்ளப் தயங்கமாட்டார்கள் என்ற பயமிருப்பதால் அகதிகளைப் பாதுகாக்க வேணடியிருக்கிறது என்று சொல்லப்பட்டது.இங்கும்இ வெளியினருடன் எந்தத் தொடர்பும் கிடையாது. (எங்கள் இறுக்கமான பரிந்துரைக்குப்பின் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது)
அவர்களுக்குக் கொடுக்கப்படும உணவின் அளவைக் கூட்டவேண்டும் என்றும் சொன்னார்கள்.
எங்கள் பரிந்துரையில்இ டெலிபோன்வசதி உடன் அமுல் நடத்தச் சொன்னோம்.அத்துடன்இ இந்த அகதி முகாமிலேயே பல வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. வேலையற்ற வெற்று மனிதர்களாக நீண்ட காலம் வாழும்போத வரும் விரக்தி சமுதாயத்தில் பாரிய விளைவுகளை எற்படுத்தும் என்று அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டது.
அகதிகளுக்கு உதவி செய்யும் பொருட்டுஇ கொழும்பில் ஒரு அறக்கட்டளையை உண்டாக்கும் முயற்சியில்இ இலங்கைக்கு வந்திருந்த புலம் பெயர் குழு சார்பில் டாக்டர் நரேந்திரனும் இஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் பலரைச் சந்தித்தார்கள்.; இதுபற்றிய முழு விபரமும் விரைவில் அறிவிக்கபடும.
தயவு செய்து எங்கள் மக்களுக்கு உதவுங்கள்;.
அகதிகளுக்கு உதவ விரும்பிய டாக்டர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்:
Dr. Kahanda Liyanage 07777 50105. -01126 98 511
( இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இலங்கையிலிருந்து 1983ம் ஆண்டின்பின் லண்டன் வந்த தமிழர்களுக்கு அகதி ஸ்தாபனத்தையும்இ அகதிகளுக்கான வீடமைப்பையும் தொடங்கி வைத்தவர்களில் ஒருத்தராகும். அத்துடன்இ தமிழ் அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் காலுன்ற பெரிய பிரச்சாரமும் செய்தவராகும். 1987ம ஆண்டு தொடக்கம் கடந்த ஆண்டுவரை இந்தியாவிலுள்ள இலங்கைத்தமிழ் அகதிகளைச சந்திப்பவருமாகும். இப்போது எங்கள் தாய் நாட்டில் தவிக்கும் மக்களுக்காகப் தொடர்ந்து தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.)

Comments are closed.